கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் மலையரசன் வெற்றி பெற்றார்.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் தே.மலையரசன், அதிமுக வேட்பாளா் இரா.குமரகுரு, பாமக வேட்பாளா் இரா.தேவதாஸ், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஆ.ஜெகதீசன் ஆகியோர் களம் கண்டனர்.
இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் அ.வாசுதேவனூா் தனியாா் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று எண்ணப்பட்டது.
இதன்முடிவில், 5,61,589 வாக்குகளை பெற்ற மலையரசன், 53,784 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் குமரகுருவை தோற்கடித்தார்.
5,07,805 வாக்குகளை பெற்று குமரகுரு இரண்டாவது இடத்திலும், 73,652 வாக்குகளை பெற்று நாதக ஜெகதீசன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இந்த தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியை நாதக நான்காவது இடத்துக்கு தள்ளியுள்ளது. பாமக வேட்பாளர் தேவதாஸ் 71,290 வாக்குகளை பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
இதே தொகுதியில் 2019 தேர்தலில் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி வெற்றி பெற்றார். 3,99,919 வாக்குகள் வித்தியாசத்தில் தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷை தோற்கடித்தார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…