திருவண்ணாமலை: சி.என். அண்ணாதுரை 2.33 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!

Published On:

| By Kavi

திருவண்ணாமலையில் திமுக சார்பில் போட்டியிட்ட சி என் அண்ணாதுரை வெற்றி பெற்றார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியிலிருந்து திமுக சார்பில் சி என் அண்ணாதுரை, அதிமுக சார்பில் கலியபெருமாள், பாஜக சார்பில் அஸ்வத்தாமன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரமேஷ்பாபு ஆகியோர் போட்டியிட்டனர்.

இவர்களில் சி.என்.அண்ணாதுரை 5,47,379 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் கலியபெருமாளை 2,33,931 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

1,56,650 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் மூன்றாவது இடத்திலும், நாம் தமிழர் கட்சி ரமேஷ்பாபு 8,38,69 வாக்குகள் பெற்று நான்காவது இடத்திலும் உள்ளனர்.

2019 தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் சி என் அண்ணாதுரை, அக்னி கிருஷ்ணமூர்த்தியை மூன்று லட்சத்துக்கு அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலூர்: கதிர் ஆனந்த் 2019ஐ காட்டிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!

அரக்கோணம் : வெற்றி கனியை பறித்த ஜெகத்ரட்சகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share