தொடங்கியது 3வது கட்ட மக்களவை தேர்தல்… வாக்களித்த மோடி, அமித் ஷா

Published On:

| By christopher

lok sabha election 3rd phase started

நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (மே 07) காலை தொடங்கியது. இந்த நிலையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் குஜராத்தில் உள்ள தங்களது சொந்த தொகுதியில் வாக்கு செலுத்தினர்.

மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளிலும் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது கேரளா உட்பட 13 மாநிலங்கள் மற்றும் ஜம்மு – காஷ்மீர் உள்ளிட்ட யூனியன் பிரதேசத்தில் உள்ள 89 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த நிலையில் 93 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன்படி குஜராத் (26), கர்நாடகா (14), மஹாராஷ்டிரா (11) உத்தரபிரதேசம் (10), மத்திய பிரதேசம் (8), சத்தீகர் (7), பீகார் (5), மேற்கு வங்காளம் (4), அசாம் (4), கோவா (2) உட்பட மொத்தம் 10 மாநிலங்களிலும், ஜம்மு காஷ்மீர்(1) மற்றும் டையூ டாமன்(2) உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இந்த தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்களாக அமித் ஷா, சிவராஜ் சிங் சவுகான், சுப்ரியா சூலே உட்பட சுமார் 1300 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில், நேற்றிரவு குஜராத் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் தங்களது சொந்த தொகுதியான  காந்திநகர் மக்களவைத் தொகுதியில் வாக்களித்து தங்களது ஜனநாயக கடைமையை நிறைவேற்றியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ரோஜா சீரியல் நடிகை சொன்ன குட் நியூஸ்… வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்!

மூன்று ஆண்டுகள் நிறைவு : வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share