தூத்துக்குடி : மீண்டும் எம்.பி.ஆகிறார் கனிமொழி

Published On:

| By Kavi

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி உறுதியாகியுள்ளது. இதன்மூலம் தூத்துக்குடி மக்கள் பிரதிநிதியாக மக்களவைக்கு செல்கிறார் கனிமொழி.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி நாம் தமிழர் சார்பில் ரோவெனா ரூத் ஜான், தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் விஜயசீலன் ஆகியோர் களம் கண்டனர்.

இன்று (ஜூன் 4) வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் தூத்துக்குடியில் கனிமொழியின் வெற்றி உறுதியாகியுள்ளது.

358927 வாக்குகள் பெற்று, 252914 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.

இரண்டாவது இடத்தில் 106013 வாக்குகளுடன் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி உள்ளார்.

நாம் தமிழர் வேட்பாளர் ரோவெனா ரூத் ஜான், 85106 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயசீலன் 79469 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார்.

2019ஆம் ஆண்டு தூத்துக்குடியில் போட்டியிட்டு 3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கனிமொழி, அந்த தொகுதியின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மதுரையில் அதிமுகவை முந்தும் பாஜக

கேரளாவில் கணக்கை தொடங்கும் பாஜக!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share