வட சென்னை : ராயபுரம் மனோவை தோற்கடித்த கலாநிதி வீராசாமி

Published On:

| By Kavi

வட சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்றார்.

வட சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி, அதிமுக சார்பில் ராயபுரம் மனோ, பாஜக சார்பில் பால் கனகராஜ், நாதக சார்பில் அமுதினி ஆகியோர் போட்டியிட்டனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் சென்னை ராணி மேரி கல்லூரியில், இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டன.

ADVERTISEMENT

இதன் முடிவில் கலாநிதி வீராசாமி 4,97,333 வாக்குகளை பெற்று, 1,58,111 வாக்குகள் வித்தியாசத்தில் ராயபுரம் மனோவை தோற்கடித்தார்.

மூன்றாவது இடத்தில் 1,13,318 வாக்குகளுடன் பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் உள்ளார்.

ADVERTISEMENT

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 95,954 வாக்குகள் பெற்று நான்காவது இடத்தில் உள்ளார்.

2019 தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் ஆர்.மோகன்ராஜை காட்டிலும் 4,61,518 வாக்குகள்  வித்தியாசத்தில் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மத்திய சென்னை – வெற்றியை தக்கவைத்த தயாநிதி மாறன்

அண்ணா ரிசல்ட் வந்துருச்சிங்கண்ணா: அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share