மத்திய சென்னை – வெற்றியை தக்கவைத்த தயாநிதி மாறன்

Published On:

| By Kavi

மத்திய சென்னை தொகுதியில் திமுக எம்.பி.தயாநிதி மாறன் வெற்றி பெற்றார்.

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டன. இந்த தேர்தல் முடிவில் திமுக கூட்டணி தமிழ்நாடு புதுச்சேரியில் 40க்கு 40 தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறது.

மத்திய சென்னை தொகுதியிலிருந்து திமுக சார்பில் சிட்டிங் எம்.பி.தயாநிதி மாறன், பாஜக சார்பில் வினோஜ், தேமுதிக சார்பில் பார்த்தசாரதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகேயன் ஆகியோர் போட்டியிட்டனர்.

தேர்தல் முடிவில் தயாநிதி மாறன் 4,13,848 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வத்தை 2,44,689 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

வினோஜ் செல்வம் 1,69,159 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.

தேமுதிக வேட்பாளர் 72,016 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கார்த்திகேயன் 46,031 வாக்குகளை பெற்றுத் தோல்வியுற்றார்.

தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெற்றி பெற்றதற்கான சான்றிதழைத் தயாநிதி மாறனிடம் வழங்கினார்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அண்ணா ரிசல்ட் வந்துருச்சிங்கண்ணா: அப்டேட் குமாரு

இங்கே 40… அங்கே 240…. : மின்னம்பலம் சொன்னதே மெய்யானது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share