தமிழக அரசுக்கு நிதித் தர மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், தனது சேமிப்பு பணத்தை அனுப்பி வைப்பதாக மழலை மொழியில் சிறுமி கூறியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. lkg child gives rs 10000 to cm fund
மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டும் தான் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
இதற்கு பாஜக தவிர தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இரண்டு நாள் பயணமாக கடலூர் சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டும் தான் என்றென்றும் பின்பற்றப்படும், நீங்கள் பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் கண்டிப்பாக நாங்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம்” என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நுரையீரல் சிறப்பு மருத்துவர் கலைகோவன் மகள் எல்கேஜி படிக்கும் சிறுமி நன்முகை “என் தாத்தாவும், பாட்டியும் தமிழாசிரியர்கள். நீங்கள் மத்திய அரசு 2000 கோடி கல்விக்காக நிதி தரவில்லை என்று கூறினீர்கள். எனவே மத்திய அரசு தர வேண்டிய பணத்தை நான் உங்களுக்கு எனது பங்களிப்பாக 10,000 ரூபாய் அனுப்பி வைக்கிறேன்” என்று மழலை மொழியில் வீடியோவில் தெரிவித்து, அதற்கான காசோலையை முதல்வரின் சிறப்பு நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
தற்போது இது தொடர்பான வீடியோவை இணையத்தில் வைரலாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.