எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு!

Published On:

| By Selvam

lk advani conferred bharat ratna

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட இருக்கிறது என்ற செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். விருது பெற்றதற்காக அவரை தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தேன்.

நம் காலத்தில் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ஒருவரான அத்வானி, இந்தியாவின் வளர்ச்சிக்கு செய்த பங்களிப்பு மகத்தானது. அடிமட்டத்திலிருந்து தனது வாழ்க்கையை தொடங்கி துணை பிரதமர் வரை உயர்ந்து சேவையாற்றியவர்.

உள்துறை அமைச்சராகவும், தகவல் தொடர்பு துறை அமைச்சராகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளார். அவரது நாடாளுமன்ற பேச்சுக்கள் எப்பொழுதும் முன்னுதாரணமானவை மற்றும் வளமான நுண்ணறிவுகள் நிறைந்தவை” என்று குறிப்பிட்டுள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜெட் ஸ்பீட் கலெக்சன்: “ஃபைட்டர்” பாக்ஸ் ஆபிஸ் இதுதான்!

அண்ணா நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share