வைட்டமின் பி12 அதிகரிக்க அசைவம் கூட சாப்பிட வேண்டாம்.. இது போதும்..!

Published On:

| By Santhosh Raj Saravanan

List Of vegetarian foods help increase vitamin B12 levels

வைட்டமின் பி12 அசைவ உணவுகளில் இருந்து மட்டுமல்ல, சைவ உணவுப் பொருட்களில் இருந்தும் கிடைக்கிறது.

இந்தியாவில் சைவ உணவு சாப்பிடுபவர்கள் இடையே வைட்டமின் பி12 குறைபாடு என்பது அதிகமாகவே உள்ளது. சைவம் சாப்பிடுபவர்கள் காய்கறி உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் அசைவ உணவிலிருந்து கிடைக்கும் வைட்டமின் பி12 கிடைப்பது இல்லை. நரம்புகளின் செயல்பாட்டை பராமரிக்கவும், ரத்த சிவப்பணுக்ள் உற்பத்திக்கும், உடலுக்கு தேவையான ஆற்றலை உருவாக்கவும் பி12 ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. அசைவம் சாப்பிடுபவர்களுக்கு பி12 இயல்பாக கிடைத்துவிடும்.

ADVERTISEMENT

ஆனால், சைவம் சாப்பிடுபவர்களுக்கு பி12 கிடைப்பது அரிதாக உள்ளது. ஆனாலும் கூட சப்ளிமெண்ட்ஸ் எடுப்பது தவிர சில சைவ உணவுகளில் நமக்கு தேவைப்படும் பி12 சத்துக்கள் கிடைக்க உதவுகின்றன. என்னென்ன உணவுகளில் பி 12 சத்துக்கள் நிறைந்துள்ளன என்பது குறித்து பார்ப்போம்.

பால் (Milk): ஒரு டம்ளர் பசும்பாலில் 1.1 மைக்ரோகிராம் வைட்டமின் பி12 உள்ளது. இது பெரியவர்களுக்கு நாள்தோறும் தேவைப்படும் 2.4 மைக்ரோகிராம் வைட்டமின் பி12-ல் 45 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. நாம் தினமும் சூடான பால், டீ, காபி, மில்க் ஷேக் என ஏதேனும் ஒரு வகையில் பால் பொருட்களை சாப்பிடலாம். மஞ்சள் சேர்த்த மசாலா பால் கூடுதல் அழற்சி எதிர்ப்பு பண்புகளை வழங்குகிறது. பால் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் இது கூடுதல் சப்ளிமெண்ட்ஸ் தேவையில்லாமல் இயற்கையான வழிமுறைகள் மூலம் அவர்களுக்கு பி12 சத்துக்களை வழங்குகிறது.

ADVERTISEMENT

தயிர் (Curd): குறைந்த கொழுப்புள்ள தயிரில் 0.6-1.0 மைக்ரோகிராம் பி12 உள்ளது. தயிர் குடல் ஆரோக்கியத்துக்கு சிறந்ததாக இருப்பதால், அது பி12 உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. இது வாய் புண்கள் மற்றும் மலச்சிக்கலாக வெளிப்படும் பி12 குறைபாடு அறிகுறிகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. கடையில் வாங்கும் தயிரை விட வீட்டில் தயாரிக்கப்பட்ட தயிரில் சிறந்த பி12 சத்துக்கள் உள்ளன. தயிரில் புரோபயாடிக்குகள் உள்ளன, அவை பி12 குறைபாட்டால் ஏற்படும் உடல் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. மாதவிடாய் காலத்தில் இரும்பு-பி12 கலவையானது பெண்களுக்கு இரத்த சோகைக்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது.

பன்னீர் (Paneer): 100 கிராம் பன்னீரில் 0.7-0.8 மைக்ரோகிராம் வரை பி12 ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது நமது தினசரி பி12 தேவைகளில் மூன்றில் ஒரு பங்கை பூர்த்தி செய்கிறது. அத்துடன் பன்னீரில் 18-20 கிராம் புரதச் சத்தும் உள்ளது. இது சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ஏற்படும் பி12 குறைபாடுகள் மற்றும் தசை வலிமை தேவைகள் இரண்டையும் நிவர்த்தி செய்கிறது. பன்னீர் புரதக் குறைபாடு மற்றும் பி12 குறைபாடு என்ற இரண்டு பிரச்னைகளுக்கு தீர்வாக உள்ளது. இதில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுப்படுத்துகிறது.

ADVERTISEMENT

செறிவூட்டப்பட்ட தானியங்கள் (சர்க்கரை இல்லாமல்): காலை உணவாக தானியங்கள் எடுத்துக்கொள்ளும்போது வைட்டமின் பி12 1.0-2.5 மைக்ரோகிராம் வரை கிடைக்கிறது. தானியங்களை செறிவூட்டுவதன் மூலம் இறைச்சிகளில் கிடைக்கும் அளவிற்கான பி12 நமக்கு கிடைக்கிறது. செறிவூட்டப்பட்ட தானியங்கள் சாப்பிடுவதன் மூலம் ரத்த சோகை 15-20 சதவீகிதம் வரை குறைக்கின்றது. ரத்த சர்க்கரை அதிகரிப்பைத் தவிர்க்க குறைந்த சர்க்கரை வகைகளைக் கொண்ட தானியங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share