மழை, குளிர் என்று பருவநிலை மாற்றங்கள் வருகிறபோது அவற்றின் மூலம் உண்டாகும் உடல் உபாதைகளைச் சமாளிக்க வீட்டில் முதலுதவிப் பெட்டி ஒன்று இருப்பது நல்லது. பெரியவர்களுக்குப் பயன்படும் பாரசிட்டமால் மாத்திரை, குழந்தைகளுக்கான பாரசிட்டமால் சிரப் போன்றவை முதலுதவிப் பெட்டியில் இடம்பெறுவது நல்லது.
மூக்கடைப்பு ஏற்பட்டால் அதைச் சரிசெய்ய உதவும் சொட்டு மருந்து போன்றவையும் முதலுதவிப் பெட்டியில் இடம்பெறலாம்.
வீட்டில் குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு போன்றவை வந்தால் கொடுப்பதற்கான மருந்துகளுக்கும் முதலுதவிப் பெட்டியில் இடம் கொடுங்கள். ஆனால், இவை போன்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே பெற வேண்டும். இந்த மருந்துகளைத் தேவைப்படும்போது மருத்துவரிடம் கேட்டுப் பயன்படுத்துவது பாதுகாப்பானது.
யூகலிப்டஸ் தைலம், கை கால் வலிக்கான ஜெல், தைலம் போன்றவை அவசரத்துக்குக் கைகொடுக்கும் என்பதால் இவையும் முதலுதவிப் பெட்டியில் இருக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக மருந்துகள் அனைத்தின் எக்ஸ்பயரி தேதியையும் கவனமுடன் பார்த்து முதலுதவிப் பெட்டியில் வையுங்கள். இதுதான் எல்லாவற்றிலும் மிக மிக முக்கியமானது என்று வலியுறுத்துகிறார்கள் பொதுநல மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: கீரை கிடைக்கவில்லையா? கவலைப்படாதீர்கள்!
டிரம்புக்கு ஓட்டு போட்டியா? இனி செக்ஸ் கிடையாது…அமெரிக்க மனைவிகள் திட்டம்!
குவாட்டாவில் குண்டுவெடிப்பு… 24 பேர் பலி… சாம்பியன்ஸ் டிராபிக்கு சிக்கல்!