11 ஆண்டுகளில் பிரதமர் மோடி பங்கேற்ற ‘கிறிஸ்துவ மத’ நிகழ்ச்சிகள்

Published On:

| By Mathi

Christian Events Modi

பிரதமர் நரேந்திர கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டெல்லி தேவாலயத்தில் நேற்று (டிசம்பர் 25) சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றார்.

பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் கடந்த 11 ஆண்டுகளில் அவர் பங்கேற்ற கிறிஸ்துவ மத நிகழ்ச்சிகள்:

ADVERTISEMENT
  • 2016-ம் ஆண்டு புனிதர்கள் குரியாகோஸ், அன்னை யூப்ரசியா புனிதர் பட்டம் பெற்றதைத் தொடர்ந்து டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
  • 2023-ல் டெல்லி கத்தோலிக்க பேராலயமான திரு இருதய ஆலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் விழாவில் பங்கேற்றார்.
  • 2023-ம் ஆண்டு 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மதத் தலைவர்களை தனது இல்லத்திற்கு அழைத்து கிறிஸ்துமஸ் கொண்டாடினார்.
  • -2024-ம் ஆண்டு கடந்த ஆண்டு, இந்திய கத்தோலிக்க ஆயர்கள் விழாவில் பங்கேற்றார்.
  • டெல்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்தில் (டிசம்பர் 25, 2025) நடைபெற்ற கிறித்துமஸ் காலை வழிபாட்டில் மோடி கலந்து கொண்டார். “இந்த வழிபாடு அன்பு, அமைதி மற்றும் கருணையின் காலத்தால் அழியாத செய்தியைப் பிரதிபலித்தது. கிறித்துமஸ் பண்டிகையின் உணர்வு, நமது சமூகத்தில் நல்லிணக்கத்தையும் நன்மதிப்பையும் ஊக்குவிக்கட்டும்,” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share