முரளி , தேவயானி, பிரகாஷ் ராஜ் நடிப்பில் களஞ்சியம் இயக்கத்தில் 1996ல் வெளிவந்த படம் பூமணி. இளையராஜா இசையில் அந்தப் படத்தில் வந்த என் பாட்டு என் பாட்டு .. பாடல் என்றும் இனிக்கும் .
அந்தப் படத்தின் படப்பிடிப்பு தளம்.
தேவயானி நடித்துக் கொண்டு இருக்கிறார் . ஷாட் எடுக்கும்போது லைட் வைக்கும் போதோ, ரிப்ளெக்டர் பிடிக்கும்போதோ அல்லது ஒளி அளவைப் பரிசோதிக்கும் போது நடிக்கும் நடிகரை தன் பக்கம் திரும்பச் சொல்வார்கள் . இதை உதவி ஒளிப்பதிவாளர்கள், சில சமயம் லைட்மேன்கள் கூட செய்வார்கள்.
ஓர் அவசர சூழலில் அது போன்ற நிலையில் நடிகை தேவயானியை லைட் மேன் ஒருவர் , தேவயானி கொஞ்சம் இந்த பக்கம் பாருங்க..”என்று சொல்லி இருக்கிறார். உடனே ஆத்திரமடைந்த தேவயானி, ” நீ எப்படி என் பெயரைச் சொல்லி கூப்பிடலாம்? மேடம் என்று தான் கூப்பிட வேண்டும்” என்று சொல்லி, ஆங்கிலத்தில் கத்தியிருக்கிறார்
”எல்லோரும் என்னை மேடம் என்று தான் அழைக்க வேண்டும். அந்த லைட்மேன் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்ட வேண்டும்” என்று கூற, யூனிட்டில் இருப்பவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, ” மேடம் என்றால் யாரை அழைக்கிறோம் என்று குழப்பம் வரும். பெயர் சொல்லக் காரணம் வேலை அவசரம். இத்தனைக்கும் அவர் கொஞ்சம் இந்தப் பக்கம் பாருங்க….’ என்று மரியாதையாகத்தான் கூறி இருக்கிறார். மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது” என்று உறுதியாக இருந்திருக்கிறார்கள்.
” மன்னிப்பு கேட்கவில்லை என்றால் நான் ஷாட்டுக்கு வரமாட்டேன் “என்று கூறிவிட்டாராம் தேவயானி.
நடிகர் முரளி வந்ததும் படத்தின் இயக்குனர் களஞ்சியம் முரளியிடம் விஷயத்தைச் சொல்ல, முரளி போய் பேசி கன்வின்ஸ் செய்து தேவயானியை அழைத்து வந்தாராம்.
மேலோட்டமாகப் பார்த்தால் , தேவயானி செய்ததில் என்ன தப்பு என்று தோன்றலாம்.
லைட்மேன் தேவயானி மேடம் என்று கூப்பிட்டு இருக்கலாம்தான் . அவர் கூப்பிடல . ஆனால் ஷாட் முடிந்ததும் தனியே அழைத்து பெயர் சொல்லிக் கூப்பிட்டது தப்பு என்று சொல்லி இருக்கலாம் . மாறாக லைட்மேன் பெயர் சொன்ன உடன், தேவயானி திட்டியும் விட்டார் .
அதன் பின் மன்னிப்புக் கேட்கச் சொன்னது… நடிக்க வராமல் உட்கார்ந்து கொண்டது என்பதால் இப்போதும் இந்த விஷயம் காணொளிகளில் பகிரப்பட்டு வைரல் ஆகிறது.
எனினும் இப்போது தேவயானி கணவர் ராஜ குமாரன்,” மகேந்திரன் பெரிய டைரக்டர் இல்லை. கமல் எல்லாம் நல்ல நடிகரே இல்லை. நாலும் மூணும் ஏழே இல்லை ”என்று பேசுவதை எல்லாம் பார்த்தால், அவற்றுக்கு முன் தேவயானி செய்தது எல்லாம் பெரிய விசயமே இல்லை.
– ராஜ திருமகன்
