நிலவில் மனிதர்கள் வாழ முடியுமா? நாசா சொல்வது என்ன?

life style

நிலவில் மனிதர்கள் உயிர் வாழ தேவையான சூழல் மற்றும் தட்பவெட்பம் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

விஞ்ஞான உலகத்தில் நாசா எதிர்காலத்துக்கு தேவையான ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த முயற்சிகளில் நாசா பல வெற்றிகளையும் கண்டுள்ளது. சில ஆண்டுகளாகவே மனிதர்கள் வேறு கிரகங்கள் மற்றும் நிலவில் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா என ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது.

அதில் மக்கள் நிலவில் வாழ்வதற்கு தேவையான தட்பவெட்பத்துடன் கூடிய குகைகள் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. நிலவின் சுற்றுவட்ட பாதையை ஆய்வு செய்து வரும் நாசாவின் விண்கலம் 2009 ஆம் ஆண்டு நிலவின் மேற்பகுதியில் குகைகள் இருப்பதை கண்டுபிடித்தது. இதையடுத்து மனிதர்கள் உயிர் வாழ தேவையான 17 டிகிரி செல்சியஸ் தட்பவெட்பம் கொண்ட குகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தற்போது நாசா தெரிவித்துள்ளது. காஸ்மிக் எனப்படும் அணுக்கரு, சூரிய கதிர்வீச்சும் மற்றும் மெல்லிய விண் துகள்கள் தாக்காத வகையில் பாதுகாப்பான வகையில் குகைகள் இருப்பதாக நாசா கூறியுள்ளது.

மனிதர்கள் உயிர் வாழ காற்று, தண்ணீர், உணவு இவை மூன்றுமே அவசியமானவை. ஆனால் நிலவில் பூமியில் இருப்பது போல் வளிமண்டலம் கிடையாது. அதனால் நிலவில் ஆக்சிஜன் வாயு நிலையில் இருக்காது. நிலவில் இருக்கும் மண்ணில் (லுனார் சாய்ல்) 42 விழுக்காடு ஆக்சிஜன் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.  ரோபோட் மூலமாக நிலவில் இருக்கும் மணலை அனல்படுத்தி, மின்சாரம் செலுத்துவதன் மூலம் வாயு நிலையில் ஆக்சிஜனை உருவாக்க முடியும் என்பதையும்  கண்டுபிடித்துள்ளனர். இதனை சோதித்து பார்த்து அதில் வெற்றியையும் கண்டுள்ளனர்.

அடுத்தபடியாக தண்ணீர், நிலவில் திரவ வடிவத்தில் இல்லாமல் பனிக்கட்டிகளாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலவில் ஆங்காங்கே பள்ளங்கள் இருக்கிறது அந்த பள்ளத்தில் சூரிய ஒளி படாமல் இருப்பதால் அந்த இடத்தில் தண்ணீர் பனிக்கட்டிகளாக இருக்கின்றன.  பனிக்கட்டிகளை திரவமாக மாற்றி தண்ணீர் எடுத்துக் கொள்ள முடியும். 

மேலும் நிலவில் இருக்கும் மணல் மூலமாக தாவரங்களை வளர்க்க முடியும் என்று ஒரு ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான சாத்தியங்கள் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது

மோனிஷா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *