தொழிற்துறைக்கு வளர்த்துக் கொள்ள வேண்டிய 10 திறன்கள்: வெளியிட்ட ”லிங்க்ட்இன்”
இந்தியாவில் வளர்ந்து வரும் முதல் 10 திறன்கள், பிரபலமான வேலைகள் மற்றும் தொழில்களில் சிறந்த திறன்கள் என்ற தலைப்பில் லிங்க்ட்இன் நிறுவனம் நேற்று ( செப்டம்பர் 3 ) ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.
”லிங்க்ட்இன்” இணைய உலகின் மிகப்பெரிய தொழில்முறை நெட்வொர்க் ஆகும். சரியான வேலை அல்லது இன்டர்ன்ஷிப்பை கண்டுபிடிக்க,
தொழில்முறை உறவுகளை இணைக்கவும் மற்றும் வலுப்படுத்தவும், உங்கள் வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவையான திறன்களைக் கற்றுக்கொள்ளவும் நீங்கள் லிங்க்ட் இன் ஆஃப்பை பயன்படுத்தலாம்.
அனுபவம், திறன்கள் மற்றும் கல்வி மூலம் உங்கள் தனிப்பட்ட தொழில்முறை “கதை”யை நீங்கள் இதில் சுய விபரமாக பதிவு செய்து கொள்ள முடியும்.
ஆஃப்லைன் நிகழ்வுகளை ஒழுங்கமைக்கவும், குழுக்களில் சேரவும், கட்டுரைகள் எழுதவும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இடுகையிடவும் மேலும் பலவற்றிற்கும் நீங்கள் லிங்க்ட் இன் ஆஃப்பை பயன்படுத்தலாம்.
லிங்க்ட்இன், ‘திறன்கள் பரிணாமம் 2022’ மற்றும் ‘திறன்களின் எதிர்காலம் 2022’ ஆகியவற்றுடன் புதிய மேம்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த இரண்டு அறிக்கைகளிலும் இந்தியாவில் வளர்ந்து வரும் முதல் 10 திறன்களையும், இந்தியாவில் தற்போது பிரபலமான வேலைகள் மற்றும் தொழில்களில் சிறந்து விளங்கும் திறன்களையும் பட்டியலிட்டிருக்கிறது.
பல நிறுவனங்கள் வெவ்வேறு வேலை முறையை ஏற்றுக்கொள்வதால், வேலைகளுக்கான திறன்கள் மாறுகின்றன, மேலும் புதிய திறன்களை அங்கீகரிக்கின்றன.
இந்த நவீன காலத்தில், தேவைக்கேற்ப திறன்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் வாய்ப்புகளை பெற முடியும்.
பணியாளர்கள் இந்தத் திறன்களை அடையாளம் கண்டுகொள்வதற்கும், அவர்களின் தொழில் வாழ்க்கையின் எதிர்காலத்திற்கு உதவுவதற்காக,
லிங்க்ட்இன் இந்தியாவில் உள்ள 92 மில்லியன் உறுப்பினர்களின் உறுப்பினர் திறன் தரவுகளின் அடிப்படையில், Skills Evolution அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.
இந்தியாவில் உயர்ந்து வரும் முதல் 10 திறன்களாக லிங்க்ட் இன் குறிப்பிட்டு இருப்பது;
- வணிக வளர்ச்சி
- சந்தைப்படுத்தல்
- விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல்
- பொறியியல்
- SQL
- விற்பனை
- ஜாவா
- விற்பனை மேலாண்மை
- மைக்ரோசாப்ட் அஸூர்
- ஸ்பிரிங் பூட்
இந்த 10 கேரியர் டெவல்ப்மெண்ட் ஆன்லைன் கேச்சிங் தங்களது லிங்க்ட்இன் டெவலெப்மெண்ட் பகுதியில் செப்டம்பர் 30, 2022 வரை இலவசமாகக் கிடைக்கும் என்று கூறியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பேடிஎம், கேஷ்ஃபிரி, ரேசார்பே அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை!