ஆயுள் காப்பீட்டுக் கழகம் இடமிருந்து 2023-24-ம் ஆண்டில் ரூ.880.93 கோடி கோரப்படாத முதிர்வுத் தொகை உள்ளதாக நாடாளுமன்றத்தில் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் செளத்ரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
மேலும் 2023-24 நிதியாண்டில் சுமார் 3,72,282 பாலிசிதாரர்கள் முதிர்வு சலுகைகளை கோரவில்லை என்றும் முந்தைய ஆண்டில் 3,73,329 பாலிசிதாரர்களுக்கு சொந்தமான ரூ.815.04 கோடி உரிமை கோரப்படாமல் இருந்தது. அதே வேளையில், உரிமை கோரப்படாத மற்றும் நிலுவையில் உள்ள உரிமை கோரல்களைக் குறைப்பதற்காக, பாலிசிதாரர்கள் தங்கள் நிலுவைத் தொகையை கோருவதற்கு ரேடியோ, அச்சு ஊடகம் மற்றும் டிஜிட்டல் மீடியாவில் விளம்பரம் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எல்.ஐ.சி மேற்கொண்டது.
அதே வேளையில், நினைவூட்டல் கடிதங்கள், சாதாரண மற்றும் விரைவு தபால் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும், மொபைல் எண் மூலமாகவும் எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது உரிமைகோரல் தீர்வு செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ‘நெஃப்ட்’ மட்டுமே பாலிசிதாரர்களுக்கு தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் முதல் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் வரை!
கிச்சன் கீர்த்தனா : கேரட் சட்னி
ஆவின் அம்பத்தூர் பண்ணைக்கு ரூ.5.10 கோடி அபராதம்: எதற்காக?
ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் கைது… பின்னணி என்ன?
விசிகவில் இருந்து முழுமையாக விலகுகிறேன் – ஆதவ் அர்ஜுனா
ஸ்டாலினுக்கு ‘கண்டனம்’… மோடிக்கு ‘வலியுறுத்தல்’!
“வெற்றிக் கூட்டணியை ஸ்டாலின் அமைத்துக் கொடுப்பார்” – பொதுக்குழுவில் பொங்கிய சிவி சண்முகம்