எல்.ஜி.எம். படத்தின் செகண்ட் லுக்!

Published On:

| By Kavi

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி  மனைவி சாக்‌ஷியின் தோனி  என்டெர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் முதல் படம் எல்.ஜி.எம். இப்படத்தின் இரண்டாவது லுக் வெளியிடப்பட்டுள்ளது.

செகண்ட் லுக் போஸ்டரில் ஹரிஷ் கல்யாண் ஒரு பேருந்தின் நடுவில் அமர்ந்திருக்க பிரதான பாத்திரங்கள் அவரைச் சுற்றி அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது.

ADVERTISEMENT

இப்படம் கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி தோனியின் தோனி என்டெர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு என்பதாலேயே இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.

படத்தில் ஹரிஷ் கல்யாண், நதியா, இவானா, யோகி பாபு மற்றும் மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். அண்மையில் தான் எல்.ஜி.எம். படக்குழு படப்பிடிப்பை முடித்துள்ளது. எல்.ஜி.எம். என்பது லெட்ஸ் கெட் மேரீட் என்பதின் சுருக்கம்.

ADVERTISEMENT


“இந்தப் படம் நிச்சயமாக ஒரு நல்ல சினிமா பார்த்ததற்கான அனுபவத்தைத் தரும். ரசிகர்கள் ஒரு விறுவிறுப்பான கதைக்களத்தையும், அதன் ஊடே உணர்வுப்பூர்வமான காட்சிகளையும், வயிறு குலுங்கவைக்கும் காமெடியையும் ஒருசேரக் காணலாம்“ என தயாரிப்பு தரப்பு தெரிவிக்கின்றது.

முதல் படைப்பு என்றாலும் சரியான திட்டமிடலுடன் நேர்த்தியாக படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்டு குறித்த காலத்தில் படம் நிறைவு செய்யப்பட்டுள்ளது என்றும் படத் தயாரிப்புக் குழு கூறியுள்ளது. 

ADVERTISEMENT

இராமானுஜம்

வந்தே பாரத் வடகிழக்கின் சுற்றுலாவை மேம்படுத்தும்: மோடி

ஐபிஎல் இறுதிப்போட்டி: பிரார்த்தனை செய்யும் விக்னேஷ் சிவன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share