தோனி தயாரிக்கும் எல்ஜிஎம் படத்தின் அப்டேட்!

Published On:

| By Selvam

தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் எல்ஜிஎம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (ஏப்ரல் 10) வெளியாகவுள்ளது.

நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனி சினிமா துறைக்கு எண்ட்ரி கொடுத்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.

ADVERTISEMENT

அவர் தயாரிக்கும் முதல் படத்திற்கு Lets Get Married என்று பெயரிடப்பட்டுள்ளது. ரமேஷ் தமிழ்மணி இயக்கும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இது ஒரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகி வருகிறது.

அண்மையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் போட்டியை கண்டு ரசித்தனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

ADVERTISEMENT

இந்த நிலையில் தோனி எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எல்ஜிஎம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தோனி தனது முகநூல் பக்கத்தில் நாளை இரவு 7 மணிக்கு வெளியிடுகிறார். இதனால் தோனி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் எல்ஜிஎம் படத்தின் ஹேஷ்டாக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

செல்வம்

ADVERTISEMENT

மோடிக்குத் திரண்ட கூட்டம்: டெல்லிக்கு போன ரிப்போர்ட்!

“மோடி எங்கள் சொந்தக்காரர்”: பெள்ளி நெகிழ்ச்சி!

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share