மத்திய அரசின் ஜனநாயக விரோத தடை உத்தரவை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தமிழக தலைவர் முகமது ஷேக் அன்சாரி தெரிவித்துள்ளார்.
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு எதிராக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து செப்டம்பர் 22, 27 என இரு தேதிகளில் பல்வேறு மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தியது
இதில் பல்வேறு சர்ச்சைக்குரிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் இதுவரை மொத்தம் 247 பி.எப்.ஐ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பு ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன், என்.சி.எச்.ஆர்.ஓ மனித உரிமை அமைப்புக்கும் 5 ஆண்டுகள் தடை விதிக்கிறோம் என்று மத்திய அரசு அறிவித்தது
. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தது.

பாதுகாப்பு அதிகரிப்பு; இணையதளம் முடக்கம்!
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிட்டத்தட்ட 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களுக்குள் செல்ல போலீஸ் தடை விதித்துள்ளது.
மேலும் அந்த அமைப்பின் இணையதளம் மற்றும் அதன் சமூகவலை தளப்பக்கங்கள் ஆகியவை முடக்கப்பட்டுள்ளது.
பிஎப்ஐ செயல்பாடு நிறுத்தம்!
இந்நிலையில், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தமிழக தலைவர் முகமது ஷேக் அன்சாரி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில் மத்திய அரசின் ஜனநாயக விரோத தடை உத்தரவை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பெயரில் செயல்பட்டு கொண்டிருந்த அனைத்து செயல்பாடுகளும் தற்போது நிறுத்திக்கொள்ளப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
Comments are closed.