ஜோதிமணி தனித்து போட்டியிடட்டும் – குஷ்பு

Published On:

| By Balaji

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு அரவக்குறிச்சி தொகுதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட விரும்பி, அதே தொகுதியைச் சேர்ந்த தமிழக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜோதிமணி பல மாதங்களாக களப்பணி செய்து வந்தார்.

ஆனால், அரவக்குறிச்சி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படவில்லை. எனினும், ஜோதிமணி தொடர்ந்து பணி செய்யப்போவதாகவும், கட்சி மேலிடம் மீது நம்பிக்கை இழந்துவிடவில்லை என்றும் சொல்லியிருந்தார். எப்படியும் ஜோதிமணி தனித்துப் போட்டியிடுவார் என்று தெரிகிறது.

இதுகுறித்து குஷ்பு, கட்சிகளின் சிட்டிங் தொகுதிகளை விட்டுக் கொடுத்துவிட வேண்டும் என முன்பே பேசி முடிவு செய்துவிட்டோம். ஜோதிமணி கேட்கும் தொகுதியில் பழனிச்சாமி என்பவர் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தலைமையின் முடிவுக்கு எதிராக தனித்து போட்டியிட விரும்பினால், ஜோதிமணி தாராளமாக தனித்துப் போட்டியிடட்டும். அதனை நாங்கள் வரவேற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share