மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்: யாரும் வெளியே வர வேண்டாம்!

Published On:

| By indhu

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என காவல்துறை சார்பாக இன்று (ஏப்ரல் 3)  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 2) இரவு செம்மங்குளம் என்ற பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் சார்பில் புகாரளிக்கப்பட்டது. சிறுத்தையின் கால் தடம் இருப்பதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் காவல்துறையினரிடம் புகாரளித்துள்ளனர்.

பொதுமக்களின் புகாரையடுத்து, சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்த காவல்துறையினர் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர்.

தொடர்ந்து, சிறுத்தையின் நடமாட்டத்தை சிசிடிவி கேமராக்கள் மூலம் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இதையடுத்து, சிறுத்தை நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்டால் 9360889724 என்ற எண்ணிற்கு அழைக்கவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுத்தை நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். காவல்துறையினரும், வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, சிறுத்தை நடமாட்டம் இருந்த செம்மங்குளம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு இன்று (ஏப்ரல் 3) ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை டவுனில் சிறுத்தை நடமாட்டத்தால் தேர்தல் பரப்புரையிலும் கொஞ்சம் தயங்கித் தயங்கியே ஈடுபடுகிறார்கள் அரசியல் கட்சியினர்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘காதல் கைகூடியது’ மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகரை மணக்கும் டாடா ஹீரோயின்!

GOLD RATE: வீழ்வேனென்று நினைத்தாயோ… உச்சம் தொட்டது தங்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share