அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் கத்தோலிக்க திருச்சபையின் போப்பாக மே 8-ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். Leo XIV elected as first American pope
கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் காலமானார். இதனை தொடர்ந்து அடுத்த போப்பை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம், ரோம் நகரின் சிஸ்டைன் தேவாலயத்தில் நேற்று (மே 8) நடைபெற்றது. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 133 கார்டினல்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் புதிய போப்பாக ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டதாக அங்குள்ள புகைக்கூண்டில் வெள்ளைப் புகை வெளியிடப்பட்டது. இதனையடுத்து அங்கு கூடியிருந்த பொதுமக்கள் உற்சாகம் பொங்க தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். புதிய போப் 14-ஆம் லியோ என்று அழைக்கப்படுவார்.
1955 இல் சிகாகோவில் பிறந்த ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட், போப் பதவியை வகிக்கும் முதல் அமெரிக்கர் ஆவார்.
போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டதும், ப்ரெவோஸ்ட் முதல்முதலில் பேசும்போது, “எங்களை ஆசீர்வதித்த போப் பிரான்சிஸின் பலவீனமான, ஆனால் எப்போதும் தைரியமாக ஒலிக்கக்கூடிய குரலை நாங்கள் இன்னும் எங்கள் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். கடவுளுடன் ஒன்றுபட்டு கைகோர்த்து, ஒன்றாக முன்னேறுவோம்” என்று தெரிவித்தார். Leo XIV elected as first American pope