விஜய்யின் கேரியரில் இமாலய வசூல் சாதனை படைத்த லியோ!

Published On:

| By christopher

leo hit its blockbuster firstday collection

நடிகர் விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸில் அதிரிபுதிரி சாதனைகளை படைத்து இந்திய திரையுலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் – நடிகர் விஜய் கூட்டணியில் உருவான ‘லியோ’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உட்பட பல மொழிகளில் நேற்று (அக்டோபர் 19) வெளியானது.

தமிழ்நாடு தவிர இந்தியாவின் மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் அதிகாலை 4 மணிக்கு லியோ திரைப்படத்தின் முதல் காட்சி வெளியானது. மேலும் முதல் காட்சியில் இருந்து படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் வரத்தொடங்கின.

அதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு தமிழ்நாட்டில் லியோ முதல் காட்சி வெளியான நிலையில் தமிழ் ரசிகர்களும் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

லியோ படத்தின் முதல்நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை இன்னும் படத்தை தயாரித்த 7ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்  வெளியிடவில்லை.

எனினும் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக திரையுலக வட்டாரத்தில் கணக்கிடப்பட்டுள்ளது.

அதன்படி நடிகர் விஜய்யின் திரைப்படம் முதல் நாளில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இது தமிழ் திரையுலகம் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பிரபல சினிமா செய்தியாளர்கள் ரமேஷ் பாலா, ராஜ் சேகர் மற்றும் பிரிட்டனில் படத்தை வெளியிட்ட அகிம்சா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தங்களது எக்ஸ் பதிவில் லியோ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

லியோ திரைப்படத்தின் பின்னணி!

‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு தளபதி விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள இரண்டாவது படம் ‘லியோ’. இந்த படத்தின் திரைக்கதையை லோகேஷ், ரத்ன குமார் மற்றும் தீரஜ் வைத்தி எழுதியுள்ளனர்.

அதிரடி பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக்கியுள்ள படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின், சாண்டி மேத்யூ தாமஸ், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்த ‘லியோ’ படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருந்தார். படக்குழுவில் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா மற்றும் எடிட்டர் பிலோமின் ராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

’அச்சம் வேண்டாம்’: அவசர எச்சரிக்கை ஒலியின் பின்னணி இதுதான்!

பிளாஸ்டிக் தடை… தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும்: உச்சநீதிமன்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share