செட்டும் பிரம்மாண்டமாய், டான்ஸும் பிரம்மாண்டமாய்!

Published On:

| By Balaji

ஜேடி – ஜெர்ரி இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன், தனது கடையின் விளம்பரங்களைக் கூட திரைப்படங்களின் தரத்திற்கு பிரம்மாண்டமாய் எடுத்தவர். பலர் அவரைக் கேலி, கிண்டல் செய்தாலும் பலரும் அவரை ரசிக்கவும் செய்தனர். இந்த நிலையில் திரைப்படம் ஒன்றில் அவர் கதாநாயகனாக நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. அவருக்கு ஜோடியாக எந்த முன்னணி நடிகை நடிக்கப்போகிறார் என்னும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த நிலையில் வடஇந்திய நடிகையான கீத்திகா திவாரி அவருக்கு ஜோடியாக அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பத்து கோடி ரூபாய் செலவில் அரண்மனை போன்ற பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களுடன் இதன் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பின் போது ஒவ்வொரு காட்சியிலும் சரவணனின் நடனத்தை, அத்தனை நடனக்கலைஞர்களும் வியந்து பார்த்து கைதட்டி பாராட்டினர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு பாடல் காட்சிக்காகவே இத்தனை கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ள நிலையில், திரைப்படம் எத்தனை பிரம்மாண்டமாய் இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தத் திரைப்படத்தை படத்தின் கதாநாயகன் லெஜெண்ட் சரவணன் தயாரித்துவருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share