டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், சி வோட்டர் நிறுவனமும் இணைந்து கேரளாவில் கடந்த மாதம் நடத்திய கருத்துகணிப்பின் முடிவுகள் நேற்று வெளியானது.
இதில், 140 தொகுதிகள் கொண்ட கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணி 86 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 53 இடங்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும், பாஜக ஒரு தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாகவும், இதர கட்சிகள் எந்த தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு சதவீதத்தைப் பொறுத்த வரை, இடதுசாரி ஜனநாயக கூட்டணிக்கு 43.8 சதவீத வாக்குகளும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 41.3 சதவீத வாக்குகளும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 9.7 சதவீத ஓட்டுக்களும் பிற கட்சிகளுக்கு 5.2 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.