புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் டேவிட் லிஞ்ச் சினிமாவை விட்டு விலகுகிறார் என்கிற வதந்தி சமீப நாட்களாக பரவி வந்த நிலையில், அதுகுறித்து தற்போது தனது x தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
ஹாலிவுட்டில் ‘ எரேசர் ஹெட் ‘ , ‘ எலிபேண்ட் மேன் ‘ , ‘ முள்ஹோலான்ட் டிரைவ் ‘ போன்ற புகழ்பெற்ற கிளாசிக் திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் டேவிட் லிஞ்ச். மாய எதார்த்தவாத சினிமாக்களை எடுத்த உலக இயக்குநர்களில் மிக முக்கியமானவர் டேவிட் லிஞ்ச்.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு எம்பசிமா நோய் இருப்பதாகவும், அதனால் இனி திரைப்படங்களை இயக்குவது சற்று சிரமம் என்றும் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, டேவிட் லிஞ்ச் திரைப்படத்துறையில் இருந்து விலகுகிறார் என பரவலாக பேசப்பட்டது.
இந்த நிலையில், அவர் தனது x தளப் பக்கத்தில் , ‘ நான் பல ஆண்டுகளாக சிகரெட் பிடித்தேன். அதன் விளைவாகத் தான் தற்போது என்னை எம்பசிமா நோய் பாதித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் புகைப் பழக்கத்தை விட்டு விட்டேன். மேலும், பல மருத்துவ சிகிச்சைகளுக்குப் பிறகு தற்போது நன்றாக குணமடைந்து உள்ளேன் என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
நான் எப்போதும் திரைப்படங்களில் இருந்து விலகுவதாக இல்லை ‘ என தன்னைக் குறித்து பரவி வந்த வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் டேவிட் லிஞ்ச்.
இவர் 2006 ஆம் ஆண்டில் ‘ இன்லாண்ட் எம்பையர் ‘ திரைப்படத்திற்கு பிறகு எந்த ஒரு முழு நேர திரைப்படத்தையும் இயக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
– ஷா
“செந்தில் பாலாஜி 67 கோடி வாங்கியிருக்கிறார்” : ED வாதம்!
சவுக்கு சங்கர் பேசியது கண்டிக்கத்தக்கது… ஆனால் குண்டர் சட்டம் எதற்கு?: நீதிபதிகள் கேள்வி!