சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
டிட்வா புயல் வலுவிழந்தாலும் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
சென்னை, திருவள்ளூரை கனமழை மேகங்கள் மீண்டும் சூழ்ந்திருப்பதாகவும், அடுத்த சில மணி நேரங்களில் சென்னை, திருவள்ளூரில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
