திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். leaders poured mkstalin birthday wishes
குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு
தமிழக முதல்வர் ஸ்டாலின், உங்கள் பிறந்தநாளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்து, மேலும் பல ஆண்டுகள் தேசத்திற்குத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் சேவை செய்ய அருள் புரியட்டும்.
துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர்
இன்று உங்கள் பிறந்தநாளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நல்வாழ்த்துக்கள்.
தேச சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் நீண்ட பலனளிக்கும் வாழ்க்கையை கடவுள் உங்களுக்கு வழங்கட்டும்.
பிரதமர் மோடி leaders poured mkstalin birthday wishes
தமிழக முதல்வர் மு.கஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற வாழ்த்துகிறேன்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி
எனது சகோதரரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இந்தியாவின் வளமான பன்முகத்தன்மை, கூட்டாட்சி அமைப்பு மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டில் நாங்கள் தொடர்ந்து ஒன்றாக நிற்கிறோம்.
நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் தமிழக மக்களுக்கு சேவை செய்வதில் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.💐 உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்க வாழ்த்துகிறேன்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அரசியலமைப்பின் கொள்கைகளைப் பாதுகாப்பதற்கும், ஜனநாயகக் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கும் நாம் அனைவரும் இணைந்து போராடுவோம்.
நீங்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறோம்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். வகுப்புவாத பிரிவினையும் கலாச்சார பெரும்பான்மைவாதமும் நமது சமூகத்தை அச்சுறுத்தும் இந்த நேரத்தில், ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மைக்கான உங்கள் உறுதியான அர்ப்பணிப்பு ஒரு உத்வேகமாகவே உள்ளது.
ஒன்றாக, பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தில் வேரூன்றிய நமது நாட்டின் உண்மையான சாரத்தை நாம் பாதுகாத்து வலுப்படுத்துவோம். உங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை வாழ்த்துகிறோம்.
ஆளுநர் ஆர்.என்.ரவி leaders poured mkstalin birthday wishes
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று தங்களுடைய 72ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுடைய தலைமையின்கீழ் தமிழ்நாட்டு மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.
மேலும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் பூரண உடல் ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடனும் தமிழ் நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றிடவும் இந்நன்நாளில் தங்களை வாழ்த்துகிறேன்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன் பிறந்த நாளை அன்னையார் உட்பட குடும்பத்தாருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வில் பங்கேற்று மகிழ்ந்தோம்.
இந்திய ஒன்றியத்தின் ஈடில்லா தலைவர் – தமிழ்நாட்டின் உரிமைக்கான சுயமரியாதைக் குரல் கழகத்தலைவர் – முதலமைச்சரின் கரத்தை மேலும் வலுப்படுத்துவோம். தமிழ்நாடு வெல்ல தளராது நடைபோடுவோம்!

விசிக தலைவர் திருமாவளவன்
இன்று பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலினுக்கு எமது இனிய வாழ்த்துகள்.
சனாதன ஃபாசிசத்தை வீழ்த்தும் கருத்தியல் களத்தில் தங்களின் தலைமைத்துவம் இன்றியமையாதது. இந்திய அளவில் இந்தி அல்லாத பிறமொழி தேசிய இனங்களை ஐக்கியப்படுத்துவது வரலாற்றுத் தேவையாகும்.
அதனையொட்டி தாங்கள் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் உற்றத் துணையிருப்போம்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
அண்ணாவின் கனவும் கலைஞரின் துணிவும் ஒருசேரக் கலந்த இந்தியாவின் முதன்மை முதல்வர், தமிழ்நாட்டு மக்களின் பாதுகாவலர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு இன்று அகவை எழுபத்தி இரண்டு.
தமிழ்நாட்டு மக்களின் நலன் மட்டுமே குறிக்கோள் என தன் வாழ்நாளில் ஐம்பத்தி எட்டு ஆண்டுகளை மக்களுக்காக அர்ப்பணித்த மாபெரும் தலைவர், பெரியார், அண்ணா, மற்றும் கலைஞரின் ஆகியோரின் கொள்கை மற்றும் அரசியல் வாரிசு, திராவிட மாடல் நாயகர் முதல்வர் ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி
‘‘திராவிட மாடல்” அரசின் தலைவராம் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 72 ஆம் ஆண்டு பிறந்த நாளில், தாய்க் கழகத்தின் சார்பில் மனங்கனிந்த குளிர்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று 72-ஆம் பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் அவரது பொதுவாழ்வு தொடர வாழ்த்துகிறேன்.
தவெக தலைவர் விஜய் leaders poured mkstalin birthday wishes
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
பிறந்த நாள் காணும் தமிழ்நாடு முதல்வர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், என்னுடைய அருமை நண்பர் மு.க. ஸ்டாலின் நல்ல ஆரோக்யத்துடன், நீண்ட காலம் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வாழ்த்துகள்.
தமிழக மக்களும், தமிழ் மொழியும், தமிழர் பண்பாடும் பல்வேறு நெருக்குதல்களுக்கு ஆளாகும் காலத்தில் தன் முன்னோர்களைப் போலவே தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரணாக உருவெடுத்திருக்கிறார் ஸ்டாலின், மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு!
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பாஜக சார்பாக, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்
மும்மொழியில் வாழ்த்துகிறேன்…
“தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!”
“Wishing the Honourable Chief Minister Thiru M.K. Stalin a very happy birthday!”
“గౌరవనీయ ముఖ్యమంత్రి శ్రీ ము.క. స్టాలిన్ గారికి హృదయపూర్వక జన్మదిన శుభాకాంక్షలు!”

திமுக எம்.பி. கனிமொழி leaders poured mkstalin birthday wishes
தென்னகத்தின் உரிமைக்குரலாய் – தமிழ்நாட்டின் சுயமரியாதைச் சுடராய் – தமிழ் நிலத்தின் தகத்தகாய சூரியனாய் – தமிழ் மக்களின் தன்னிகரற்ற தலைவராய் விளங்கி வரும் திராவிட மாடல் முதல்வர் – கழகத் தலைவர் அண்ணன் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாளில் எனது அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது தலைமையில் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கச் சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுக்க உறுதியேற்போம்.
காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்,தமிழ்நாட்டின் முதலமைச்சர், அன்பிற்குரிய அண்ணன் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
நமது தமிழ் இனத்தின் மொழி,பண்பாடு, சுயமரியாதை மற்றும் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கவும், சமூகநீதி, சமத்துவத்தை நிலைநாட்டவும் நீங்கள் ஆரோக்கியத்தோடும்,நெடிய ஆயுளோடும் வாழ இதயப்பூர்வமான நல்வாழ்த்துகள்!
இயக்குநர் சீனு ராமசாமி
முதல்வர் ‘அப்பா ‘ மு. க. ஸ்டாலினுக்கு எந்நாளும் உங்கள் சிந்தைபடி மக்களுக்கு நன்மை செய்யும் நாளாக அமைந்திட என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்.