LCU: லோகேஷின் ஷார்ட் பிலிம்.. டைட்டில் இதுதான்!

Published On:

| By Selvam

தமிழ் சினிமாவில் யுனிவர்ஸ் என்ற கான்செப்ட்டை தனது படங்களில் பயன்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

கார்த்தி நடித்த கைதி படத்தை கமல் ஹாசனின் விக்ரம் படத்துடன் இணைத்து இந்த டிரெண்டை தொடங்கி வைத்த லோகேஷை ரசிகர்கள் பாராட்டி, இந்த யுனிவர்ஸ் கதைக்களத்தில் லோகேஷ் இயக்கும் படங்களை Lokesh Cinematic Universe அதாவது LCU என்று பிராண்ட் செய்ய தொடங்கினர்.

விக்ரம் படத்தை தொடர்ந்து விஜய்யின் லியோ படத்தையும் LCU- க்குள் இணைந்து சர்ப்ரைஸ் கொடுத்தார் லோகேஷ். LCU- வின் அடுத்த படமாக கைதி 2 வெளியாகும் என்று அறிவித்த லோகேஷ், இதற்கிடையில் தலைவர் 171 படமான கூலி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் தற்போது அந்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும், LCU யுனிவர்ஸின் தொடக்கம் குறித்து லோகேஷ் கனகராஜ் ஒரு ஷார்ட் பிலிம் எடுத்திருக்கிறார். கைதி, விக்ரம் படங்களில் இடம்பெற்ற பிஜோய் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நரேன், இந்த ஷார்ட் பிலிமின் மெயின் லீடாக இருப்பார் என்று கூறப்படுகிறது. நரேன் உடன் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் இந்த ஷார்ட் பிலிமில் நடித்துள்ளனர் என்றும் 20 நாட்களில் இந்த ஷார்ட் பிலிம் படமாக்கப்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், தற்போது LCU ஷார்ட் பிலிமின் டைட்டில் குறித்த ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஷார்ட் பிலிமுக்கு “LCU Chapter 0 : பிள்ளையார் சுழி” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆக பரவி வருகிறது. விரைவில் இந்த ஷார்ட் பிலிம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், கைதி 2 படத்திற்கு பின் விக்ரம் 2 படம் வெளியாகும் அந்த படம் தான் LCU வின் இறுதியாக இருக்கும் என்று முதலில் லோகேஷ் கூறியிருந்தார். ஆனால், தற்போது லியோ 2 படம் தான் LCU வின் இறுதி படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கு விஜய் ஓகே சொல்வாரா? LCU வின் முடிவு எப்படி இருக்கும் என்பதை எல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அங்காளி, பங்காளி ரெடியா? – மதுரை முத்தையா கோவில் கிடா விருந்து எப்போது?

சென்னையில் கிளைமேட் எப்படி? வானிலை மையம் ஜில்ஜில் அப்டேட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share