நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளான ஜூலை 20ஆம் தேதி அனைத்து உறுப்பினர்களும் கடைசி நாள் என்பதால் ஒருவித பரபரப்பில் இருந்தனர். வேலூர் மக்களவைத் தேர்தல் பணிகளுக்கு செல்ல வேண்டியிருப்பதால் தங்கள் உதவியாளர்களிடம் வேலூரில் வீடு பிடிக்க சொல்வது, சமையல்காரர் அமர்த்துவது என்று போனில் கட்டளைகளாக இட்டுக் கொண்டிருந்தனர்.
எம்.எல்.ஏ.க்களுக்கே இப்படி இருக்கும்போது வேட்பாளரின் தந்தையான துரைமுருகனுக்கு இருக்காதா! பகல் 12 மணியளவில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசிக் கொண்டிருக்கும்போது, எதிரே அமர்ந்திருந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் மணிக்கட்டில் அணிந்திருந்த கடிகாரத்தை தட்டித் தட்டி சீக்கிரம் முடிக்குமாறு துணை முதல்வர் பன்னீரிடம் தனக்கே உரிய சைகை பாணியில் சொல்லிக் கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த பன்னீர் சிரித்துக்கொண்டே என்ன என்று கேட்க, அருகே இருந்த அமைச்சர் ஜெயக்குமார் அவர் வேலூர் போகணும் சீக்கிரம் முடிக்க சொல்கிறார் என்று சிரித்தார். அப்போது துணை முதல்வர் பன்னீர் செல்வம், “ஓ… by எலக்ஷனுக்கு போகணுமா?” என்று கேட்க, திமுக தரப்பில் இருந்து தங்கம் தென்னரசு எழுந்து, ‘by election இல்ல பையன் எலக்ஷன்’ என்றார்.
இதற்கு பதிலளித்த துணை முதல்வர், “ஏற்கனவே அறிவிக்கப்பட்டு நின்றுபோய் மீண்டும் வேட்பு மனு வாங்கி நடத்துவதால் by எலக்ஷன்தானே” என்று சொல்லிவிட்டு, “சரி… சரி… அதை buy எலக்ஷனாக மாற்றாமல் இருந்தால் நல்லதுதான்” என்று பணப் பட்டுவாடா பற்றி சைகையாக சுட்டிக் காட்டிப் பேசினார்.
இந்த உரையாடலால் இரு தரப்பிலும் சிரிப்பொலி எழுந்தது. எனினும் இருதரப்பு ஆதரவோடு அவை குறிப்பில் இருந்தும் இந்த உரையாடல் நீக்கப்பட்டுவிட்டது. இவ்வளவு அன்னியோன்யமாக சட்டமன்றத்தில் செயல்படும் திமுகவும், அதிமுகவும் எப்படி வேலூரில் மோதிக் கொள்வார்களோ என்று பத்திரிகையாளர்கள் தங்களுக்குள் கமென்ட் அடித்துக் கொண்டார்கள்.
**
மேலும் படிக்க
**
**[ஓ.பன்னீருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: டெல்லி அவசரப் பயணம் பின்னணி!](https://minnambalam.com/k/2019/07/21/40)**
**[ அதிமுகவுக்கு ஸ்டாலின் திடீர் அழைப்பு!](https://minnambalam.com/k/2019/07/22/15)**
**[பதவியிலிருந்து நீக்குவேன்: நிர்வாகிகளை எச்சரித்த தினகரன்](https://minnambalam.com/k/2019/07/22/5)**
**[அத்தி வரதர்: கலெக்டரை கண்டித்த முதல்வர்](https://minnambalam.com/k/2019/07/21/26)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**