நடிகர் சிவகார்த்திகேயன் இளைய சமுதாயத்தை நல்வழிபடுத்தி, வழிகாட்டுதல்கள் வழங்கி வருகிறார் என்று நெல்லை மாவட்ட துணை காவல் ஆய்வாளர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
மிகக் குறுகிய காலகட்டத்திலேயே தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடமும், ஏராளமான ரசிகர்களையும் சம்பாதித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஹீரோ என்ற அடையாளத்தைத் தாண்டி தனது குணாதிசயங்களாலும் சிவகார்த்திகேயன் பலரையும் கவர்ந்துள்ளார்.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும்போது, **“நான் என்னை நினைத்துப் பெருமை கொள்வதாக இரண்டு விஷயங்களை மட்டும் தான் கூறுவேன். அதைத்தாண்டி பெருமை கொண்டதாக எதுவும் கிடையாது. நான் இன்று வரைக்கும் சிகரெட் பிடித்தது கிடையாது. மது அருந்தியதும் கிடையாது. அதற்குக் காரணமும் எனது நண்பர்கள் தான். என் நண்பர்கள் என்றுமே என்னை, ‘வாடா மச்சான் அங்கே போகலாம், இங்கே போகலாம்’ என்று கூப்பிட்டது கிடையாது. உங்கள் காசை கொடுத்து, உங்கள் அப்பா அம்மா கஷ்டப்பட்டு சம்பாதித்த காசை கொடுத்து உங்கள் உடம்பை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள். இது அறிவுரை கேட்க கசக்கும். நீங்கள் குடிக்கும் அந்த லிக்கரும் தான் கசக்கிறது”** என்று கூறினார்.
நட்சத்திரங்கள் சொல்வதை அப்படியே கேட்பவர்கள் என்றால் இதனையும் கொஞ்சம் கேளுங்க . குடிக்க , புகைக்க எந்த நண்பனும் அழைக்க மாட்டான், அப்படி அழைப்பவர் நட்பிலிருந்து வெளியேறுங்கள். அவன் உங்களை உலகிலிருந்து வெளியேற அழைக்கிறான்.
Thanks @Siva_Kartikeyan #Smokingkills #Drinkingkilla https://t.co/SSJbxWwwpG— Arjun Saravanan (@ArjunSaravanan5) July 7, 2020
அந்த வீடியோவை ரசிகர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவைப் பார்த்த நெல்லை துணை கமிஷனர் அர்ஜுன் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதனைப் பகிர்ந்து, **“நட்சத்திரங்கள் சொல்வதை அப்படியே கேட்பவர்கள் என்றால் இதனையும் கொஞ்சம் கேளுங்க . குடிக்க , புகைக்க எந்த நண்பனும் அழைக்க மாட்டான். அப்படி அழைப்பவர் நட்பிலிருந்து வெளியேறுங்கள். அவன் உங்களை உலகிலிருந்து வெளியேற அழைக்கிறான்.”** என்று கூறி நடிகர் சிவகார்த்திகேயனுக்குத் தனது நன்றிகளையும் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், ‘சரியாக சொன்னீர்கள். நன்றி சார்’ என்று கூறினார். அதற்கு துணை கமிஷனர் அர்ஜுன் சரவணன், **“இளைய சமுதாயத்தை நல்வழிப் படுத்தும் உங்களின் உணர்வுப்பூர்வமான வழிகாட்டுதல்கள் தொடரட்டும். அன்பும் நன்றியும்”**என்று கூறி தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
