தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த மே 8-ஆம் தேதி வெளியானது. இந்தநிலையில், பொறியியல், கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. Last date to apply for Engineering
அந்தவகையில், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 7-ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது. இந்தநிலையில், ஜூன் 2 வரை 2,81,266 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். Last date to apply for Engineering
இது குறித்து கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கடந்த மே 7-ஆம் தேதி தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பப்பட்டது.

ஜூன் 2 மாலை 6 மணி நிலவரப்படி 2,81,266 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர். இதில் 1,20,807 மாணவர்களும் 1,00,579 மாணவிகளும் ஆக மொத்தம் 2,21,386 மாணாக்கர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர்.
தொழில்நுட்பத்திற்கேற்பவும், தமிழகத்தில் உள்ள 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் ஒவ்வொரு கல்லூரியிலும் தொழிற்சாலைகளின் தேவைக்கேற்பவும், நவீன 12 பாடப்பிரிவுகள் இந்தாண்டு தொடங்கப்பட்டுள்ளன.
இதனால் அரசு கல்லூரிகளில் 720 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் 54 கூடுதல் இடங்களில் அரசுப் பள்ளி மாணாக்கர்கள் பயன்பெறுவார்கள்.
ஜூன் 6 வரை விண்ணப்பப் பதிவு செய்ய காலம் உள்ளதால் மாணாக்கர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் பொறியியல் சேர்க்கைக்கான தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்துகொள்ளலாம்.
மேலும், மாணாக்கர்களுக்கு ஏதேனும் விளக்கங்கள் தேவைப்படின் தமிழ்நாடு முழுவதும் 110 தமிழ்நாடு பொறியியற் மாணாக்கர் சேர்க்கை சேவை மையங்கள் (TFC Centres) நிறுவப்பட்டுள்ளன.
அந்த சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், 1800 425 0110 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவோ அல்லது tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Last date to apply for Engineering

