அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 24 பேர் உயிரிழப்பு: என்ன காரணம்?

Published On:

| By Kavi

மஹாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் மருத்துவமனையில்  12 பச்சிளம் குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாந்தெட் மாவட்டத்தில் சங்கர்ரோ சவான் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் நாந்தெட் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.

இதுகுறித்து மருத்துவமனை டீன் கூறுகையில், “கடந்த 24 மணி நேரத்தில் இறந்த 24 பேரில், 12 பேர் பெரியவர்கள். இவர்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனர்.  சிலர் பாம்பு கடி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆண் குழந்தைகளும், 6 பெண் குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT

70 முதல் 80 கிமீ சுற்றளவில் இதுபோன்ற மருத்துவமனை இதுஒன்று தான் உள்ளது. அதனால் வெகுதொலைவில் இருந்தும் இங்கு வந்து சிகிச்சை பெறுவார்கள். கடந்த சில நாட்களாக  நோயாளிகளின் வருகை அதிகளவு உள்ளது. இது சிக்கலை ஏற்படுத்தியது.

ஹாஃப்கைன் என்ற நிறுவனம் உள்ளது. அவர்களிடம் இருந்துதான் மருந்து வாங்க வேண்டும். ஆனால் அங்கிருந்து வாங்க முடியவில்லை என்பதால் உள்ளூரில் இருந்தே மருந்துகளை வாங்கி நோயாளிகளுக்கு வழங்கினோம். மருத்துவ பணியாளர்களின் பற்றாக்குறையும் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ஒரே நாளில் இத்தனை பேர் உயிரிழந்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்துள்ள மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மருத்துவமனையில் என்ன நடைபெற்றது என்ற விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்..

இந்த விவகாரத்தை வைத்து ஆளும் பாஜக- சிவசேனா கூட்டணி அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உலகக்கோப்பை 2023: 10 அணிகள்… ஒரு டிராபி… வெல்லப்போவது யார்?

ரஜினியின் “தலைவர் 170” பட ஹீரோயின்ஸ்!

 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share