ஊழலை மறைக்க சிலர் மொழியின் பெயரால் அரசியல் செய்கின்றனர் என்று திமுக மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார். Language politics to hide corruption
திமுக எம்.பி.க்கள் புதிய கல்விக் கொள்கை, தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை ஆகியவற்றுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மாநிலங்களவையில் இன்று (மார்ச் 21) பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “உங்களுக்கு (திமுக அரசு)மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழில் மொழிபெயர்த்து கொண்டுவர தைரியம் இல்லை. எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்ததும் இந்த படிப்புகள் தமிழிலும் கொண்டு வருவதை உறுதி செய்வோம்.
ஊழலை மறைக்க திமுக மொழியின் பெயரில் அரசியல் செய்கிறது. ஒவ்வொரு மொழியும் நாட்டின் ரத்தினம் போன்றது. தெற்கின் அனைத்து மொழியையும் நாங்கள் எதிர்க்கிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள். மொழியின் பெயரால் விஷத்தைப் பரப்புகிறார்கள்.ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள மொழியை விரும்பும் இவர்கள் இந்தி மொழியை விரும்பவில்லை.
மொழியின் பெயரால் நாட்டைப் பிளவுபடுத்தாதீர்கள். உங்கள் தவறுகளையும் ஊழலையும் மறைக்க முயற்சிக்கிறீர்கள். உங்கள் ஊழலை நாங்கள் அம்பலப்படுத்துவோம். இதற்காக ஒவ்வொரு கிராமமாக நாங்கள் செல்வோம்.
இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஒரு துணை மொழி. அது ஆதிக்கத்தை செலுத்தவில்லை.
நரேந்திர மோடி அரசு, அலுவல் மொழித் துறையின் கீழ், தமிழ், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, அசாமி, பெங்காலி என அனைத்து இந்திய மொழிகளின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக செயல்படும்” என்று கூறி திமுக அரசை தாக்கி பேசினார்.
முன்னதாக இன்று காலை மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள், மத்திய அரசு இந்தி மொழியை தமிழகத்தின் மீது திணிப்பதாக குற்றம்சாட்டி பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது. Language politics to hide corruption