நில மோசடி வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும் வயநாடு எம்பி பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா உள்ளிட்ட 11 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. Robert Vadra Sonia
2008-ம் ஆண்டு ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான நிறுவனம், டெல்லியை அடுத்த குருகிராமில் ‘மோசடியாக’ நிலம் வாங்கியது என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பாக 2018-ம் ஆண்டு குருகிராம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் ஜூலை 17-ந் தேதி ராபர்ட் வதேரா உள்ளிட்ட 11 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
முன்னதாக, ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான 43 அசையா சொத்துகளை பறிமுதல் செய்யவும் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனடிப்படையில் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ரூ37 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
