நில அபகரிப்பு வழக்கு: ஜெயக்குமாருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

Published On:

| By Kalai

Supreme Court notice to Jayakumar

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும் அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சனை இருந்து வந்தது.

ADVERTISEMENT

இந்தநிலையில் தனது செல்வாக்கை பயன்படுத்தி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன்குமார் ஆகியோர் அடியாட்கள் மூலம் 8 கிரவுண்ட் நிலத்தை  அபகரித்ததாகவும், மேலும் ஜெயக்குமார் தரப்பு தனக்கு கொலை மிரட்டல் விடுத்தது எனவும் மகேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

இதனடிப்படையில் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது 6 பிரிவுகளில் சென்னை மத்திய குறப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ADVERTISEMENT

இதனை எதிர்த்தும் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜெயக்குமார் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  

இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹிரிஷிகேஷ் ராய் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு காவல்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார், வழக்கின் விவரங்களை முழுமையாக ஆராயாமல் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஜெயக்குமார் தற்போதும் அரசு பதவியில் உள்ளாரா என கேள்வி எழுப்பினர். அதற்கு, அவர் முன்னாள் அமைச்சர் என தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் பதிலளித்தார்.

பின்னர், இந்த விவகாரத்தில் பதிலளிக்க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்ட நீதிபதிகள்,  வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

கலை.ரா

போலி பத்திரப்பதிவு: வழக்கு நிலுவையில் இருந்தாலும் புகார் அளிக்கலாம்!

அதிமுக வேட்பாளருடன் பெண் வாக்குவாதம் : தலைக்கு மேல் கும்பிடு போட்ட தென்னரசு!

Photo of author
Kalai
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share