லால் சலாம் எப்படி இருக்கிறது?… ரசிகர்கள் விமர்சனம்!

Published On:

| By Manjula

Lal Salaam Twitter Review

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், நிரோஷா, செந்தில், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் ‘லால் சலாம்’. Lal Salaam Twitter Review

லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கிறார். கிரிக்கெட்டில் நடக்கும் அரசியல்களை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டு உள்ளது.

1980 காலகட்டத்தில் நடந்த, உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டு இருக்கும் இந்த கதையில், ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவும் பயிற்சியாளராக நடித்துள்ளார்.

Lal Salaam Twitter Review

ரஜினிகாந்த் சுமார் 40 நிமிடங்கள் வரை நடித்துள்ளதால் ‘லால் சலாம்’ படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததா? என்பதை இங்கே பார்க்கலாம்.

கார்த்திக் என்னும் ரசிகர்,”இதுபோல கதையை தேர்வு செய்ததற்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பாராட்டுகிறேன்.

இரண்டாம் பாதி, ரஹ்மான் இசை மற்றும் பாடல்கள், ரஜினிகாந்த் கேமியோ மற்றும் அவரின் நடிப்பு, நிரோஷாவின் நடிப்பு ஆகியவை எனக்கு பிடித்திருந்தது,” என பாராட்டி இருக்கிறார்.

அதே நேரம் படத்தின் முதல் பாதி தன்னை வெகுவாக கவரவில்லை என்றும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

திலக்ராஜ் என்னும் ரசிகர்,”நல்ல கதை. ஆனால் திரைக்கதை இன்னும் நன்றாக எழுதி இருக்கலாம். ரஜினியின் நடிப்பு ரசிகர்களை திருப்திபடுத்துவதாக உள்ளது.

விஷ்ணு விஷால் நடிப்பும் சிறப்பு. இதுபோன்ற மிக சாதாரணமான இடைவேளை காட்சியை இதற்கு முன் பார்த்தது இல்லை,” என கூறியிருக்கிறார்.

விமர்சகர் அமுதபாரதி,”ரஜினிகாந்த் காட்சிகள் நன்றாக உள்ளன. விஷ்ணு விஷாலுக்கு காட்சிகள் அதிகம் உள்ளன. படத்தின் முதல் பாதி தடுமாறுகிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை சிறப்பு,” என  தெரிவித்துள்ளார்.

நிர்மல் குமார் என்னும் ரசிகர்,”மனிதநேயம் மதங்களை வென்று விடும். சமீபகாலமாக படத்தின் 2-வது பாதி நிறைய படங்களுக்கு நன்றாக இல்லை. ஆனால் லால் சலாம் படத்தில் இரண்டாம் பாதி சூப்பர். கிளைமேக்ஸ் கடினமாக இருந்தது,” என பாராட்டி உள்ளார்.

https://twitter.com/Nirmal_twetz/status/1755824099077882248

இதுபோல மேலும் பல ரசிகர்களும் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். சில தடுமாற்றங்கள் இருந்தாலும் படத்தின் 2-வது பாதி, ரஜினி நடிப்பு, ரஹ்மான் பின்னணி இசை ஆகியவை படத்துக்கு நல்ல விமர்சனங்களை அளித்துள்ளன.

மொத்தத்தில் ‘லால் சலாம்’ தியேட்டரில் சென்று பார்க்கலாம்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தங்கம், வெள்ளி விலையில் ஏற்பட்ட சிறிய மாற்றம்!

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் சஸ்பெண்ட்! 

🔴Live : Lal Salaam Public Review | Lal Salaam Movie Review | Lal salaam FDFS Review | Rajinikanth

Lal Salaam Twitter Review

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share