லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ளது “லால் சலாம்” படம்.
3, வை ராஜா வை ஆகிய படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா இயக்கியுள்ள 3 வது படம் இது. லால் சலாம் படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
லால் சலாம் படத்தில் ரஜினியின் காட்சிகள் 20 நிமிடங்கள் மட்டுமே இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இன்று (ஜனவரி 15) இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் “ஏ புள்ள” பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் காதல் பாடலாக உருவாகியுள்ள “ஏ புள்ள” பாடலை சித் ஶ்ரீராம் பாடியுள்ளார். கபிலன் இந்த பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளார். லால் சலாம் படம் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…