இந்திய விமானப்படையின் வான் சாகச நிகழ்வை சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் குடும்பமாக வந்து உற்சாகத்துடன் கண்டுகழித்து வருகின்றனர்.

இந்திய விமானப்படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், சென்னையில் மெரினா கடற்கரையில் இன்று (அக்டோபர் 6) காலை 11 மணி முதல் மிகப் பிரமாண்ட விமான வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்வை காண சென்னையின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் குவிந்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட பலர் நேரில் கண்டு களித்து வருகின்றனர்.

வானில் இதுவரை எம்.ஐ 17, ஹார்வர்ட், டகோட்டா, ரஃபேல், தேஜஸ், சுகோய் உள்ளிட்ட இந்திய விமானப்படையில் உள்ள விமானங்கள் பல்வேறு சாகசங்களை செய்து வருகின்றன.

மேலும் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பாண்டியா, சோழா, பல்லவா, நட்ராஜ், காவேரி, கலாம், புயல், நீலகிரி என பல்வேறு பெயர்களில் ஒவ்வொரு வகை விமானங்களும் அணிவகுத்து பார்வையாளர்களை பரவசப்படுத்தி வருகின்றன.

மேலும் தமிழ் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இந்திய விமானப் படை அதிகாரிகள் தமிழிலேயே உற்சாகமாக வர்ணனை செய்து வருகின்றனர்.

இந்நிகழ்ச்சிகளை நேரில் சென்று பார்க்க முடியாதவர்கள் நமது மின்னம்பலம் யூடியூப் தளத்தில் நேரலையாக பார்க்கலாம்.
கிறிஸ்டோபர் ஜெமா
நடன இயக்குநர் ஜானியின் தேசிய விருது ரத்து : சதீஷ் கிருஷ்ணனுக்கு வழங்கப்படுமா?