தமிழக சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 24) நீர்வளத்துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற்று வருகிறது.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட நீர்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில், “திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஏரி, பூண்டிநீர்த்தேக்கம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியை தூர்வாரும் பணிகள் ரூ.20.44 கோடி மதிப்பீட்டில் செயலாக்கத்தில் உள்ளன. Lake dredging work
மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் செங்குன்றம் ஏரியினை தூர்வாரும் பணி தொடங்கப்பட உள்ளது. மேற்கண்ட 4 ஏரிகளைத் தூர்வாருவதன் மூலம் 1.904 டி.எம்.சி அடி கொள்ளளவை மீட்பது குறிக்கோளாகும். Lake dredging work
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திலுள்ள காட்டூர் மற்றும் தட்டமஞ்சி ஆகிய இரட்டை ஏரிகளின் கொள்ளளவினை மேம்படுத்தி ரூ.62.36 கோடி மதிப்பீட்டில் நீர்த்தேக்கம் உருவாக்கும் பணி முடிவடைந்துள்ளது.
இதன் மூலம் பெருநகர சென்னைக்கு கூடுதல் குடிநீர் ஆதாரம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 5,804,38 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.