மீண்டும் லைலா – சிம்ரன் கூட்டணி: மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Published On:

| By Selvam

அறிவழகன் இயக்கி வரும் ‘சப்தம்’ திரைப்படத்தில் நடிகை லைலா- சிம்ரன் இணைந்து நடிக்க உள்ளனர்.

‘ஈரம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கி கொண்டவர்

ADVERTISEMENT

ஆல்பா பிரேம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஆதி நாயகனாக நடிக்கும் சப்தம் திரைப்படத்தை அறிவழகன் இயக்குகிறார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

சப்தம் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி தொடங்கப்பட்டது. படத்தில் கதாநாயகியாக நடிகை லட்சுமிமேனன் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ஹாரர் திரில்லராக உருவாகும் ‘சப்தம்’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மூணாரில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப்பின் ‘சர்தார்’ படத்திலும், ‘வதந்தி’ இணையத் தொடரிலும் நடித்த நடிகை லைலா ‘சப்தம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.

தற்போது, நடிகை சிம்ரன் படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சிம்ரன் நடிக்கும் 50 வது படமாகும்.

ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் சிம்ரன், லைலா இருவரும் முன்னதாக பார்த்தேன் ரசித்தேன், பிதாமகன் படங்களில் இணைந்து நடித்திருந்தனர்.

கதாநாயகிகளாக நடித்து வந்த போது ஒரே படத்தில் நடித்தவர்கள் திருமணமாகி செட்டில் ஆன பின்பு மீண்டும் குணசித்திர வேடங்களில் நடிக்க தொடங்கியபின் சப்தம் படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.

தமிழ் சினிமாவின் தொடர் காமெடி ஹாரர் படங்களிலிருந்து ரசிகர்கள் இளைப்பாறும் வகையில், ஒரு இனிமையான மாற்றமாக அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் இருக்கும் என்கிறார் இயக்குநர் அறிவழகன்.

இராமானுஜம்

விராட் கோலியின் ’நாட்டு நாட்டு’: இணையத்தில் வைரல்!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: எடப்பாடி வேட்புமனு தாக்கல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share