கானா, நெஞ்சுக்கு நீதி என தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் அருண்ராஜா காமராஜ். நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகமான அருண்ராஜா நேர்த்தியான படங்களை இயக்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
இதன்பிறகு தற்போது அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடிப்பில் “லேபில்” என்ற ஒரு புதிய வெப் சீரிஸ் தயாராகி இருக்கிறது. கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸ் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. முத்தமிழ் படைப்பகம் புரொடக்ஷன் நிறுவனம் இந்த வெப் சீரிஸை தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இந்த வெப் சீரிஸுக்கு இசையமைத்துள்ளார்.

தற்போது லேபில் வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. தனது அடையாளத்தையும், தன் ஏரியா இளைஞர்களின் அடையாளத்தையும் மாற்ற நினைக்கும் கதாநாயகனின் போராட்டமே லேபில் வெப் சீரிஸின் ஒன் லைன் கதை.
#LABEL https://t.co/6VT9AH7Twd
— Jai (@Actor_Jai) October 18, 2023
நடிகர் ஜெய்க்கு இந்த “லேபில்” வெப் சீரிஸ் ஒரு பக்கா கம் பேக்காக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
– கார்த்திக் ராஜா
கோயம்பேடு மார்க்கெட்டில் 10 நாட்களுக்கு சிறப்பு சந்தை!
தமிழ்நாட்டுக்கு வெளியே… லியோ ரிலீஸை கொண்டாடும் ரசிகர்கள்!
