‘லேபில்’ வெப் சீரிஸ்: 2வது ட்ரெய்லர் எப்படி இருக்கு?

Published On:

| By Monisha

Label Web Series 2nd Trailer

கனா, நெஞ்சுக்கு நீதி என தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை இயக்கியவர் அருண்ராஜா காமராஜ். பல படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்த அருண்ராஜா காமராஜ், நல்ல படங்களை இயக்கி இயக்குனராகவும் மக்களின் ஆதரவை பெற்றார்.

தற்போது அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடிப்பில் ‘லேபில்’ என்ற ஒரு புதிய வெப் சீரிஸ் தயாராகி இருக்கிறது. கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸ் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வரும் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது. முத்தமிழ் படைப்பகம் புரொடக்‌ஷன் நிறுவனம் இந்த வெப் சீரிஸை தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இந்த வெப் சீரிஸுக்கு இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே லேபில் வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது லேபில் படத்தின் 2வது ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அடையாளத்திற்காக நடக்கும் கேங் வார், அடையாளத்தை மாற்ற போராடும் ஹீரோ, அனல் பறக்கும் ஆக்சன் காட்சிகள் என முதல் ட்ரெய்லரை விட அதிக அழுத்தமான வசனங்களோடும், ஆக்சன் காட்சிகளோடும் லேபில் வெப் சீரிஸின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

வேலைவாய்ப்பு : BECIL நிறுவனத்தில் பணி!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share