நடிகர் அமீர் கான் தயாரிப்பில் இயக்குநர் கிரன் ராவ் இயக்கிய ’லாப்பட்டா லேடீஸ்’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
பெண் கல்வி, விவசாயம் குறித்த விழிப்புணர்வு, முற்போக்குச் சிந்தனைகள் போன்றவற்றை பேசிய இத்திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும் பல பாராட்டுகளைப் பெற்றது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் 75 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு லாப்பட்டா லேடீஸ் திரைப்படம் அங்குள்ள மினி அரங்கில் இன்று(ஆகஸ்ட் 9) திரையிடப்பட்டது. இதனை தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட அனைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது குடும்பத்தினருடன் கண்டுகளித்தனர்.
இந்த நிகழ்வில் படத்தின் இயக்குனர் கிரண் ராவ், தயாரிப்பாளர் அமீர் கான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
படம் திரையிடலுக்கு பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், நடிகர் அமீர்கானை “நீங்கள் நீதிமன்றத்திற்குள் சென்று அதன் நடைமுறைகளை நிஜ வாழ்க்கையில் பார்க்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
அதனை ஏற்றுக்கொண்ட அமீர்கான், லாப்பட்டா லேடீஸ் திரைப்படம் உச்சநீதிமன்றத்தில் திரையிடப்பட்டதை மிகப்பெரிய கவுரமாக கருதுவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து இயக்குநர் கிரண் ராவ் பேசுகையில், “இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் திரையிடப்பட்டதன் மூலம் ‘லாப்பட்டா லேடீஸ்’ வரலாற்றை உருவாக்கியுள்ளது. இதைப் பார்க்கும்போது என் இதயம் மிகுந்த பெருமிதத்தால் நிரம்புகிறது. இந்த அரிய கவுரவத்திற்காக இந்தியாவின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டுக்கு நான் எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கிரண் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– ஷா, கிறிஸ்டோபர் ஜெமா
ஆ.ராசா உட்பட 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைப்பு : முழு விவரம்!
Comments are closed.