அச்சிடப்படும் புதிய ரூ.2,000 நோட்டு ஒன்றின் விலை 65 பைசா குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு புதிய வடிவிலான ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்பட்டு மக்களின் புழக்கத்துக்கு விடப்பட்டது. இந்த நோட்டுகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் மட்டுமே அச்சிடப்பட்டு வருகின்றன. இந்த நிறுவனம் அச்சிடும் ரூ.2000 நோட்டு ஒன்றுக்கு 2017-18 நிதியாண்டில் ரூ.4.18 விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் 2018-19 நிதியாண்டில் இதன் விலை ரூ.3.53 ஆகக் குறைந்துள்ளது. அதாவது நோட்டு ஒன்றின் விலை 65 பைசா குறைந்துள்ளது.
இந்த விவரங்களை ஜூலை 9ஆம் தேதி மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின்போது மத்திய நிதித் துறை இணையமைச்சரான அனுராக் தாகூர் வெளியிட்டார். ரூ.200 நோட்டுகளின் விலை குறித்த விவரங்களையும் அவர் தெரிவித்திருந்தார். 2017-18ஆம் ஆண்டில் 200 ரூபாய் நோட்டு ஒன்றுக்கு ரூ.2.24 விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 2018-19ஆம் ஆண்டில் அது ரூ.2.15 ஆகக் குறைந்துள்ளது. பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அச்சிடும் நோட்டுகளுக்கு மட்டுமே இந்த விலை பொருந்தும்.
செக்யூரிட்டி பிரின்டிங் & மானிடரிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனமும் நோட்டுகளை அச்சிடுகிறது. இந்த நிறுவனத்தால் அச்சிடப்படும் 500 ரூபாய் நோட்டு ஒன்றின் விலை ரூ.3.37 ஆக உள்ளது.
**
மேலும் படிக்க
**
**[இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!](https://minnambalam.com/k/2019/07/09/22)**
**[டிஜிட்டல் திண்ணை: மாமா… மாப்ள… திமுக-அதிமுக கலகல!](https://minnambalam.com/k/2019/07/09/84)**
**[புறநானூறுக்கு பதில் திருக்குறள்: மக்களவையில் ஆ.ராசா](https://minnambalam.com/k/2019/07/09/79)**
**[ஆச்சரியமும் விறுவிறுப்பும் இல்லாத உலகக் கோப்பை!](https://minnambalam.com/k/2019/07/09/14)**
**[10% இட ஒதுக்கீடு: எதிர்ப்பு – 16, ஆதரவு – 5](https://minnambalam.com/k/2019/07/09/24)**
�,”