வைகோவுக்கு எதிராக தொடர்கிறது போராட்டம்

Published On:

| By Balaji

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஏப்ரல் 6-ம் தேதி பத்திரிகையாளர்கள் சந்திப்பில், திமுக தலைவர் கருணாநிதியை நாவால் சுட்டெரித்தார், வைகோவின் பேச்சுக்கு அனைத்து தலைவர்களும் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, மக்கள் நலக் கூட்டணியில் உள்ளவர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். திமுக-வினர் தொடர்ந்து தங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்கும்விதமாக, வைகோவின் உருவபொம்மையை எரித்து வருகிறார்கள். கடலூர் மாவட்டத்திலும், நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலிலும் திமுக-வினர் பெரும் திரளாக திரண்டு உருவபொம்மையை எரித்து, இவ்வளவுகாலம் முற்போக்கு சிந்தனைப் போர்வையில், பிற்போக்காக இருந்த வைகோவை எதிர்த்து கடுமையான கோஷங்கள் எழுப்பியுள்ளார்கள்.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share