வெற்றி பெறுவேன்: கங்கை அமரன்

Published On:

| By Balaji

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் கங்கை அமரன், ‘இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெறுவேன்’ என்று கூறினார்.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் கங்கை அமரன் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது: “மோடியின் உத்தரவுப்படி நடக்கும் ஊழியனாக, தொண்டனாக வருவதில் பெருமையடைகிறேன். தமிழகத்தில் என்னை பா.ஜ.க. வேட்பாளராக தேர்வு செய்த தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்தவன். சுத்தமான அரசியல்வாதிகள் மட்டுமே உள்ள பா.ஜ.க-வில் இருப்பது குறித்து பெருமைப்படுகிறேன். நான் வேட்பாளரானதால் எனக்கு மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இது எனக்கு உற்சாகமாக உள்ளது. மாற்றத்தை கொண்டு வருபவர்கள் யார் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். இதற்கு பிள்ளையார் சுழி போட்ட மோடி, அமித்ஷா பொன்.ராதா, தமிழிசைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நல்லது நடக்கும்” என்று அவர் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share