இன்று ஒயின் குடிக்கும் தினமாம். அளவாகவும் சரியாகவும் ஒயினைப் பயன்படுத்தினால் மிக அழகான தோற்றத்தையும் பெறலாம்.
ஹாலிவுட் முதல், கோலிவுட் வரையிலான முன்னணி நடிகைகள், தங்களின் முகத்தைப் பளபளப்பாக வைத்துக்கொள்ள ரெட் ஒயின் பயன்படுத்துவதாக கிசுகிசுக்கள் உலா வருகிறது.
அழகுக்காக, மருத்துவத்துக்காக, ஹெல்த்தியாக வாழ்வதற்காக என ஏதேதோ காரணங்களுக்காக நாம் தினம் தினம் பருகுவது ரெட் ஒயினே என்றாலும்கூட, அது ஒருகட்டத்தில் பருகுபவரை அடிமையாக்கி விடும்.
முகப்பருவால் அவஸ்தைப்படுபவர்கள், ரெட் ஒயினை சருமத்தில் தடவி மசாஜ் செய்து ஊறவைத்து கழுவினால், சருமத்தில் உள்ள முகப்பருக்கள் விரைவில் நீங்கிவிடும்.
தற்போதுள்ள கடுமையான வெயிலால் சருமத்தின் நிறமானது பழுப்பு நிறத்தில் மாறுவதோடு, சரும செல்கள் அதிகம் பாதிக்கப்படுகிறது. இத்தகைய பிரச்னையிலிருந்து விடுபட, ரெட் ஒயினை பயன்படுத்துங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
ரெட் ஒயினில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கும். மேலும் இது டைப் 2 நீரிழிவு ஏற்படுவதைத் தடுப்பதோடு, எலும்புகளை வலிமையடைய செய்யும்.
சிலருக்கு சரும வறட்சியானது அதிகம் இருக்கும். அத்தகைய வறட்சியைப் போக்க வேண்டுமெனில், ரெட் ஒயின் கொண்டு மசாஜ் செய்தால், வறட்சி நீங்குவதோடு, சருமமானது இறுக்கமடைந்து காணப்படும்.
பொலிவிழந்த சருமம் நன்கு அழகாக காணப்பட வேண்டுமெனில், தினமும் ரெட் ஒயினைக்கொண்டு சருமத்தை 10 நிமிடங்கள் மசாஜ் செய்து வர வேண்டும்.
தாய்லாந்து நாடு ஒயின் மசாஜுக்கு மிகவும் பிரபலம்.
பாரம்பர்யமாகவும் முறை தவறாமலும் தயாரிக்கப்படும் மேலைநாட்டு ஒயின்களில் வேண்டுமானால், மேலே குறிப்பிட்ட ஆன்ட்டி ஆக்சிடன்ட்டுகள் இருக்கக்கூடும். தற்போது கிடைக்கும் ஒயின்கள் எல்லாம் ஒரிஜினல் கிடையாது என்ற பரவலான கருத்தும் உள்ளது.
