பத்ம பூஷண் விருது பெற்ற தோனி

Published On:

| By Balaji

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி நேற்று (ஏப்ரல் 2) இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்றார்.

இந்திய அணி கடந்த 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையைக் கைப்பற்றியது. 28 வருடங்களாகக் காத்திருந்த இந்திய அணிக்கு தோனி தலைமையில் இந்த வெற்றி கிட்டியதால், அவருக்கு இந்திய இராணுவத்தில் லெப்டினன்ட் கேணல் என்ற நிலையை வழங்கி கவுரவித்தது. எனவே நேற்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் லெப்டினன்ட் கேணல் போன்று உடை அணிந்து ராணுவ வீரர் போல் நடந்து வந்து விருதினை பெற்றுக்கொண்டார் தோனி. இந்த விருதினை இந்திய நாட்டின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி பெருமைப்படுத்தினார்.

ADVERTISEMENT

இந்திய அணி கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் நாள் உலகக்கோப்பையைக் கைப்பற்றியது. அதிலிருந்து சரியாக 7 வருடங்களுக்கு பின்னர் இந்த விருதானது தோனிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தோனியின் மனைவியும் கலந்து கொண்டார். தோனி விருது பெற்றதற்கு சக வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ்விற்கு பின்னர் இந்த விருதினை வென்ற இரண்டாவது வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார். இதற்கு முன்னர் 2007ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் தோனி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share