ADVERTISEMENT

டி20: மிச்சம் வைக்காத இந்தியா!

Published On:

| By Balaji

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுவதுமாகக் கைப்பற்றியுள்ளது.

கயானாவில் நேற்று (ஆகஸ்ட் 6) நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஏற்கனவே முதலிரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவி மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடரை இழந்த நிலையில் ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் அந்நாட்டு வீரர்கள் களமிறங்கினர். ஆனால், எவின் லெவிஸ் 10 ரன்களிலும் சுனில் நரேன் 2 ரன்களிலும் ஹெட்மயர் 1 ரன்னிலும் அடுத்தடுத்து சஹர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பின்னர் களமிறங்கிய பொலார்டு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியைச் சரிவிலிருந்து மீட்டார். அவருக்கு நிக்கோலஸ் பூரானும், பௌவலும் துணையாக நின்றனர். அரைசதம் கடந்த பொலார்டு ஆறு சிக்சர்களைப் பறக்கவிட்டு 58 ரன்கள் எடுத்த நிலையில் நவ்தீப் சைனி பந்துவீச்சில் ஸ்டம்புகளைப் பறி கொடுத்தார். நிக்கோலஸ் 17 ரன்களிலும் கார்லஸ் ப்ரெத்வெய்ட் 10 ரன்களிலும் ஆட்டமிழக்க பௌவல் 32 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஃபாபியன் ஆலன் 8 ரன்களுடன் அவருடன் நின்றார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது.

147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மாவுக்குப் பதிலாக இந்தப் போட்டியில் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக தவனுடன் இணைந்து இறங்கினார்.

ADVERTISEMENT

ராகுல் 20 ரன்கள் சேர்க்க, தவன் 3 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த விராட் கோலியும், ரிஷப் பந்தும் நிலைத்து நின்று ஆடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இருவரின் விக்கெட்டையும் கைப்பற்ற முடியாமல் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்கள் திணறினர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில் 45 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்து கோலி எதிர்பாராதவிதமாக தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். கடந்த இரு ஆட்டங்களில் சரியாக ஆடாமல் ஏமாற்றம் அளித்த பந்த் 42 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 4 சிக்ஸர்களும் 4 பவுண்டரிகளும் அடங்கும். 19.1ஆவது ஓவரிலேயே சிக்ஸர் அடித்துதான் பந்த் வெற்றியைப் பெற்றுத்தந்தார்.

**

ADVERTISEMENT

மேலும் படிக்க

**

**[தீரன் மூலம் ராமதாஸ் போடும் திட்டம்!](https://minnambalam.com/k/2019/08/06/19)**

**[டிஜிட்டல் திண்ணை: நண்பர் சிலை திறக்க வருவாரா ஃபரூக் அப்துல்லா?](https://minnambalam.com/k/2019/08/06/81)**

**[காஷ்மீர் கட்சிகளின் பதவி வெறியும் ஒரு காரணம்!](https://minnambalam.com/k/2019/08/06/6)**

**[கோமாளி டிரெய்லர்: ரஜினி ரியாக்ஷன்!](https://minnambalam.com/k/2019/08/06/21)**

**[கார்ப்பரேட்டுகள் கைக்குப் போகிறதா காஷ்மீர்? – தமிழகக் குரல்!](https://minnambalam.com/k/2019/08/06/20)**


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share