2019-20ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவிகிதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது.
இதுகுறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள உலகப் பொருளாதார அறிக்கையில், ’2018-19 நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவிகிதமாகவும், குறிப்பாக ஜனவரி – மார்ச் காலாண்டில் 5.8 சதவிகிதமாக மட்டுமே இருந்தது. எனினும், நடப்பு 2019-20 நிதியாண்டில் 7.5 சதவிகித வளர்ச்சியை இந்தியா கொண்டிருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற வான்வெளித் தாக்குதல்களால் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளில் நிலையற்ற தன்மை இருப்பதாகவும் உலக வங்கி எச்சரித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியதன் தாக்கத்தால் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய தெற்காசியப் பொருளாதாரங்கள் பாதிக்கப்படும் என உலக வங்கி கூறுகிறது. எனினும், இந்தியாவைப் பொறுத்தவரையில், குறையும் பணவீக்கம், அதிக முதலீடுகள் போன்ற காரணங்களால் வளர்ச்சி நிலையானதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய அரசு சமீப காலங்களில் மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகளின் பயன்கள் இந்த நிதியாண்டில் கிடைக்கும் எனவும் உலக வங்கி தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான சீனா, இந்த ஆண்டில் 6.2 சதவிகித வளர்ச்சியை மட்டுமே கொண்டிருக்கும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. இதற்கு முந்தைய 2018-19ஆம் ஆண்டில் சீனா 6.6 சதவிகித வளர்ச்சியைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
**
மேலும் படிக்க
**
**
[திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!](https://minnambalam.com/k/2019/06/08/23)
**
**
[திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!](https://minnambalam.com/k/2019/06/07/70)
**
**
[நடிகர் சங்கத் தேர்தல்: பின்னணியில் அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/06/08/48)
**
**
[வாட்ஸ் அப்பில் கேள்வி: ஆள்வைத்து அடித்த அமமுக மா.செ!](https://minnambalam.com/k/2019/06/08/15)
**
**
[ராஜ்நாத் சிங் – அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி](https://minnambalam.com/k/2019/06/07/31)
**
,”





